
மஹகஸ்தோட்டை மலைகளை பார்த்தவாறு ரம்மியமான கிரிகரி ஏரிக்கரையோரத்தில் அமைந்துள்ள நுவரெலியா தேசிய விடுமுறை விடுதியானது, மூன்று விதமான தங்குமிட வசதிகளை வழங்குகிறது. இணைக்கப்பட்ட குளியலைக்கொண்ட மூன்று தனியாக்கப்பட்ட இரண்டு அறைகளைக்கொண்ட சிறுவீடுகள், இணைக்கப்பட்ட குளியலைக்கொண்ட 9 இரட்டை அறைகள் தொகுதி, மூன்று தனித்தனி குடும்ப அறைகள் மற்றும் பொதுக்குளியல் மன்றும் பொதுக்கழிப்பறைகளைக் கொண்ட 22 பங்க் விடுதிகள் என்பன காணப்படுகின்றன.
சூடான நீர் மற்றும் சூடாக்கிகள், கைத்தறி, உணவகம், மாதுபான விடுதி, குழந்தைகள் பூங்கா போன்ற வசதிகள் இங்கு காணப்படுகின்றன.

முன்பதிவுப் பிரிவு: +94 112 437059 / 60 வெளி - 409
விடுதி அலுவலர்: NHR இன் திரு. பெத்தும் சாமர, நுவரெலியா. 071 5377443