இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சானது நிதி அமைச்சுடனான கலந்துரையாடலின் பின்னர் சுற்றுலா மேம்பாட்டு வரியை 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த சுற்றுலா மேம்பாட்டு வரியானது இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் பயன்படுத்தப்படும்.
2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் பகுதி 1 இன் படி, 1968 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சுற்றுலா மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட எல்லா நிறுவனத்தினதும் மொத்த வருமானத்தின் 1% ஆனது விதிக்கப்படும் வரியானது சுற்றுலா மேம்பாட்டு வரியெனப்படும்.
இருப்பினும் ஜனவரி 1, 2019 இலிருந்து மற்றும் அதற்குப்பின்னர் குறித்த வரியானது எந்த நிறுவனமாவது வருடத்திற்கு 12 மில்லியன் ரூபா மொத்த விற்பனை வசூலை அதிகரிக்காமலும் அல்லது காலாண்டு மொத்த விற்பனை வசூலானது 3 மில்லியனை அதிகரிக்காமலும் இருக்கும் பட்சத்தில் அந்த வசூலின் 0.5 வீதமானது சுற்றுலா மேம்பாட்டு வரியாக வசூலிக்கப்படும். சுற்றறிக்கையைப் பார்க்க..
TDL காலாண்டு அறிக்கைகள் மன்றும் மேலதிக தகவல்களுக்கு சுற்றுலா மேம்பாட்டு வரி வர்த்தமானியைப் பார்க்கவும்.
அ) ஒரு சுற்றுலா ஹோட்டல், அதாவது மொத்த விற்பனையிலிருந்து பெறப்பட்ட அல்லது பெறத்தக்க பெறுமானத்திலிருந்து பத்து வீதம் வரையிலான சேவைக்கட்டணமும், 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச்சட்டத்தின் படி வசூலிக்கப்பட்ட பெறுமதி சேர் வரியும் நீக்கலாக
"ஆ) ஒரு பயண முகவர், அதாவது உள்ளூர் மக்களால் அவருக்கு வழங்கப்பட்ட சேவைகளுக்கு அவர் வழங்கிய கட்டணங்கள் மற்றும் அக்கட்டணங்களுக்கான 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச்சட்டத்தின் படி வசூலிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி தவிர்ந்த சுற்றுலாத்துறைக்கு வழங்கிய சேவைகளின் மொத்த பற்றுச்சீட்டுக்கள்; இருப்பினும், 1968 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சுற்றுலா மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற பொது விற்பனை முகவர்கள் உட்பட பயண முகவரிடமிருந்து விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் போது பெற்ற வறிபனைப்பங்கிற்கு அத்தகைய வரி விதிக்கப்படாது.
"இ) ஒரு சுற்றுலா விற்பனை நிலையம், அதாவது, 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச்சட்டத்தின் படி வசூலிக்கப்படும் பெறுமதி சேர் வரி தவிர்ந்த எந்த விற்பனை நிலையத்தினதும் மொத்தப் பொருள் விற்பனையால் கிடைக்கப் பெற்ற அல்லது பெறத்தக்க பெறுமானம்."