Chatbot Icon
...

மேம்பாட்டுத் தரநிரல்கள்

மேம்பாட்டுத் தரநிரல்கள்

சமூக மற்றும் சுற்றூச்சூழல் குறித்த கரிசனையுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் கொண்டுசெல்லப்படுவதை உறுதிசெய்யவும், அந்த அபிவிருத்திகளானது சுற்றுலாப்பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இலங்கை சுற்றுலாத்துறையின் ஒட்டுமொத்த கொள்கைளுக்கும் நோக்கங்களுக்கும் பங்களிப்பையும் உறுதிசெய்துகொள்ள மேம்பாடுத் தரநிரல்கள் அவசியமாகிறது.

welcome background image

உட்கட்டமைப்பு

அனைத்துச் சுற்றுலா நிறுவனங்களுக்குமான நீர்வழங்களானது, தரம் மற்றும் அளவில் போதுமானதாகவும் விநியோகம் நிலையானதாகவும் இருத்தல் வேண்டும். ஹோட்டல்களுக்கு ஒரு விருந்தினருக்கு 450 லீட்டர் நீர் குறைந்தபட்ச தேவையாக உள்ளது. கண்ணாடி போத்தல்களில் தண்ணீரை வழங்குவது வரவேற்கத்தக்கது.


மேற்பரப்பு நீர்

ஈரப்பதம் மற்றும் சேதம் ஏற்படாமல் நீரை அகற்ற வடிகால்கள் போதுமானதாக இருத்தல் வேண்டும். சேகரிப்பு மற்றும் மீள்பயன்பாடானது வடாவமைப்பு மற்றும் செயற்பாட்டிற்குள் உள்வாங்கப்பட வேண்டும்.


மின்சாரம்

அனைத்து சுற்றுலா நிறுவனங்களுக்கும் போதுமான மற்றும் நம்பகமான மின்சார இணைப்பு அல்லது மின்னாக்கி இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வளங்கள், குறிப்பாக சூரிய சக்தி ஊக்குவிக்கப்பட வேண்டும். .
தொலைத்தொடர்பு

தேவையின் தன்மை மற்றும் சேவையின் அளவைப் பொறுத்து ஹோட்டல்களில் 10 - 20 அறைகளுக்கு குறைந்தபட்சம் 1 தொலைபேசி இணைப்பு இருக்க வேண்டும்.


கழிவு நீர்

சிறிய சுற்றுலா நிறுவனங்களில் ஒழுங்காக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஒரு கழிவுநீர்தொட்டி மற்றும் ஊறுகுழி என்பன நிலத்தடி நீர் மாசுபாடுக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு குறைந்தபட்சத் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் காணப்பட வேண்டும். அனைத்து புதிய ஹோட்டல்களும் பிற பெரிய சுற்றுலா நிறுவனங்களும் சுற்றுப்புற கழிவுநீர் அமைப்புடன் இணைக்கப்பட வேண்டும் அல்லது CEA அங்கீகரிக்கப்பட்ட தரங்களுக்கு வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்ட தங்கள் சொந்த தொகுப்புச் சுத்திகரிப்பு வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.


திடக்கழிவு

சுகாதாரமான சேமிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள், தனியான மீள் சுழற்சி என்பன வழங்கப்பட வேண்டும். ஹோட்டல்களில், ஒருநாளைக்கு ஒரு விருந்தினருக்கு 0.5 கிலோகிராமானது தாவர மற்றும் உபகரங்களினை சரியான அளவில் பயன்படுத்த உதவும். பெரிய அளவிலான திட்டங்களுக்கு அந்த இடத்திலேயே திடக்கழிவுகளை எரிப்பது பொருத்தமானதாக இருக்கும். கழிவுகளை ஒடுக்கல் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
நிலத்தடி வடமிடல்

புதியா சுற்றுலா அபிவிருத்திக்காக, பார்வைத்தோற்றத்தை விரிவாக்கும் பொருட்டு வடமிடலா சேவைகள் நிலத்தடி மூலம் நடைபெற வேண்டும். தற்போதுள்ள சுற்றுலாப்பகுதிகள் மற்றும் கவரும் இடங்கள் தற்போதுள்ள விநியோக இணைப்புக்களை நிலத்தடிக்கு கொண்டுசெல்ல முயற்சிக்க வேண்டும்.


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு

எல்லா சுற்றுலா சார் திட்டங்களும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் அனுமதிக்க அனுப்பப்படும். திட்டத்தின் அளவு மற்றும் அமைவிடத்தின் உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையானது ஒரு சுற்றுச்சூழல் ஆய்வை நடாத்தப் பணிக்கப்படும். (ஒரு ஆரம்ப சுற்றூச்சூழல் ஆய்வு அல்லது விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு).

 

 

சமூக தாக்க மதிப்பீடு (SIA)

சமூக ரீதியாக பாதிக்கப்படக்கூடிய இடங்களில் உள்ள பெரிய சுற்றுலா அபிவிருத்திகளுக்குக்கும் மற்றும் அனைத்து திட்டங்களுக்கும் சமூக தாக்க மதிப்பீடானது மேற்கொள்ளப்பட வேண்டும்.

பின்னடைவுகள்

கடலோர பாதுகாப்புத்துறை, நகர அபிவிருத்தி அதிகார சபை, புகையிரத திணைக்களம், வனவிலங்கு திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், நீர்ப்பாசனத்துறை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் விதிகளின் படி போதுமான பின்னடைவுகள் பராமரிக்கப்பட வேண்டும்.

கடலோர பாதுகாப்புத்துறையானது அவர்களது கடலோர மண்டல முகாமைத்துவ திட்டத்தில் பின்னடைவுகளின் எல்லைகளை கண்டறிந்துள்ளது. சுற்றுலா வலயங்களில் குறிப்பிட்ட பின்னடைவுகள் பேணப்பட வேண்டும். பின்னடைவு எல்லைகளுக்குள்ளே நிரந்தமான கட்டுமானங்கள் அதை ஒத்தவை அனுமதிக்கப்பட மாட்டாது. இருப்பினும் நிரந்த அடித்தளங்கள் இல்லாத எளிதில் நீக்கக்கூடிய மென் அபிவிருத்திகள் அனுமதிக்கப்படும்.

நீர்விளையாட்டு தொடர்பான கட்டிடங்களானது (அவற்றின் செயற்பாட்டு நோக்கங்களுக்காக கடற்கரைக்கு அண்மைய பகுதியில் கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது), இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையானால் ஒவ்வொரு படிமுறையாக பரிசீலிக்கப்படும்.

 

இயற்கை வளங்களின் நுகர்வு

துய்மையான உற்பத்தி நுட்பங்கள், குறைந்த நீர் நுகர்வுப் பாத்திரங்கள், மழைநீரை திறம்படப் பயன்படுத்தல், மாற்றுச் சக்தி வளங்கள் என்பன எல்லா சுற்றுலாச் சேவை நிறுவனங்களில் கணப்படுவது வரவேறுகத்தகதாகும்.

 

 

கழிவுநீர் அகற்றல் சட்டகம்

சிறிய சுற்றுலா நிறுவனங்களில் ஒழுங்காக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஒரு கழிவுநீர்தொட்டி மற்றும் ஊறுகுழி என்பன நிலத்தடி நீர் மாசுபாடுக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு குறைந்தபட்சத் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் காணப்பட வேண்டும்.

அனைத்து புதிய ஹோட்டல்களும் பிற பெரிய சுற்றுலா நிறுவனங்களும் சுற்றுப்புற கழிவுநீர் அமைப்புடன் இணைக்கப்பட வேண்டும் அல்லது CEA அங்கீகரிக்கப்பட்ட தரங்களுக்கு வடிவமைக்கப்பட்டு மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய வகையில் நிறுவப்பட்ட தங்கள் சொந்த தொகுப்புச் சுத்திகரிப்பு வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

மீள்சுழற்சி செய்யப்பட்ட நீரை கழுவவதற்கும் தோட்ட செய்கைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் அதிகப்படியான நீர் CEA மற்றும் உள்ளூராட்சி வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வெளியேற்றப்பட வேண்டும்.

மேற்பரப்பு நீர் அகற்றல்

ஈரப்பதம் மற்றும் சேதம் ஏற்படாமல் நீரை அகற்ற வடிகால்கள் போதுமானதாக இருத்தல் வேண்டும். சேகரிப்பு மற்றும் மீள்பயன்பாடானது வடாவமைப்பு மற்றும் செயற்பாட்டிற்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு

விருந்தினர் பாதுகாப்பிற்கு போதுமான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். போதுமான தீ எச்சரிக்கை மற்றும் தீயிலிருந்து தப்பும் வழிகள் காணப்பட வேண்டும்.

தளச் செயலெல்லை அடர்த்தி

அதிகபட்ச தள செயலெல்லை அடர்த்தியாக (அதாவது ஒரு கட்டடத்தின் தடப்பகுதியின் பரப்பளவு, முழுப்பரப்பளவின் சதவிகிதமாக) 30% அபிவிருத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். சாத்தியமான அபிவிருத்தித் தளங்கள் குறைந்த, நடுத்த மற்றும் உயர்ந்த அடர்த்தி மூலம் தரப்படுத்தப்பட வேண்டும். உள்ளூர் தள நிலமைகள், பொது இட அமைவுகள், தள நிலப்பரப்பு, தாங்குதிறன் மற்றும் சமூகவியல் மற்றும் சற்றுச்சூழலியல் அம்சங்கள் போன்ற காரணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

தர அடிப்படையில் பொது அதிகபட்ச அடர்த்தி பின்வருமாறு:

குறைந்த அடர்த்தி : ஒரு ஹெக்டேயருக்கு 25 இரட்டை விருந்தினர் அறைகள்
நடுத்தர அடர்த்தி : ஒரு ஹெக்டேயருக்கு 62 இரட்டை விருந்தினர் அறைகள்
அதிக அடர்த்தி : ஒரு ஹெக்டேயருக்கு 125 இரட்டை விருந்தினர் அறைகள்

தாங்குதிறன் மற்றும் EIA மற்றும் SIA ஆய்வுகள் மேற்படி அதிகரிப்புக்களை நிலையாகப்பேணலாம் என்று பரிந்துக்கும் தளங்களில் மட்டுமே அதிக அடர்த்தியைக் கருத்திற் கொள்ள வேண்டும். அடுத்தடுத்த நீட்டிப்புக்கள் அனுமதிக்கப்படலாம். ஆனால் முதலில் தீர்மானிக்கப்பட்ட அடர்த்தியை மீறக்கூடாது.

நிலப்பரப்பு

ஒரு தளத்தினு தற்போதைய மற்றும் முன்மொழியப்பட்ட நிலப்பரப்புக்கு ஒரு விரிவான பகுப்பாய்வு தேவைப்படுகின்றது. ஒரு முழு நிலப்பரப்பு வடிவமைப்பானது மேம்பாடு முன்மொழிவுச் சமர்பித்தலின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். இது அந்தரங்கம், ஒலி மாசுபாடு, காட்சியியல் மேம்பாடு மற்றும் வளிகாப்புத்தட்டி போன்றவற்றைக் கருத்திற்கொண்டு ஒரு முழுமையான ஒருங்கிணைந்த திட்டமாக இருக்க வேண்டும். இந்த முன்மொழிவில் எல்லை வேலிகள், பாதைகள், சாலைகள், தெரு தளபாடங்கள் மற்றும் இட விளக்குகள் என்பவற்றை உள்ளடக்கும். ஏற்கனவே உள்ள மரங்களையும் திட்டத்திற்குள் இணைத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், முக்கியமான மரங்களை வேரோடு பிடுங்க வேண்டுமென்றால் கவனமாக வேர்ப்பந்தாக்கி, தளத்தின் வேறு இடமொன்றில் மீள்நட்டப்படல் வேண்டும். காட்சிகள் சம்பந்தமான விடயங்கள் உணர்வுபூர்வமாக கருத்திற்கொள்ளப்படுவதோடு ஏனைய பொருத்தமான அம்சங்களும் சேர்க்கப்பட வேண்டும். தளத்தில் தாவர வளர்ப்பகம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

காற்றோட்டம் மற்றும் குளிரூட்டல்

உட்கட்டுமான வடிவமைப்பை மேம்படுத்தவும், மின்சக்திப் பாவணையை குறைக்கவும் இயக்கும் செலவுகளைக்குறைக்கவும், சுற்றலாத் தளங்களின் பொதுப்பகுதிகளை மேலதிகமாக மின்விசிறியின் பாவனையோடு இயற்கையான காற்றோட்டத்தோடு அமைப்பதை ஊக்குவித்தல் வேண்டும். படுக்கையறை வடிவமைப்பிற்கு சிறப்புக்கவனம் செலுத்தப்படல் வேண்டும். குறிப்பாக ஜன்னல்கள் மற்றும் திரைகளை காற்றோட்டம் நிகழும் வண்ணம் வடிவமைக்கப்பட வேண்டும். இதில் மின்விசிறிகள் மற்றும் சுவர் அல்லது பிறிந்த குளிரூட்டப்பட்ட அலகுகள் என்பனவும் சேர்க்கப்பட வேண்டும். இது விருந்தினருக்கு இயற்கையான காற்றோட்டம் அல்லது குளிரூட்டப்பட்ட அறைகள் என்ற தேர்வை வழங்கும்.

வாகனத்தரிப்பிடம்

பெரிய நடைபாதை மேற்பரப்பின் காட்சித்தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு நிலப்பரப்பின் திட்டத்திற்குள் வாகன நிறுத்தம் முழுமையாக ஒருங்கிணைக்ககப்படல் வேண்டும். நிழல் மற்றும் காட்சி மேம்பாட்டிற்காக வாகனத் தரிப்பிடமானது சிறுசிறு அலகுகளாக உடைக்கப்பட்டு அதனிடையே தாவரங்கள் நட்டப்பட வேண்டும். கார் தரிப்பிட இடங்கள் 2.4 மீட்டர் × 4.8 மீட்டர் இருத்தல் வேண்டும். திறந்த கார் தரிப்பிற்காக ஒரு இடத்திற்கு குறைந்தபட்சம் 30 சதுர மீட்டர் பரப்பளவு இருத்தல் வேண்டும். போதுமான சுற்றுலா பயணிகள் வாகனம் நிறுத்தக்கூடிய இடமும் வழங்கப்பட வேண்டும்.

தரிப்பிட நில மேற்பரப்பானது ஒட்டுமொத்த நிறுவன வடிவமைப்பிற்கு ஒத்ததாகவும், குறைவான வாகன நெரிசல் உள்ள இடங்களின் நில மேற்பரப்பானது கொங்க்ரீட் அல்லது கழுவப்பட்ட சரளையால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கீல் நடைபாதைகள் பொருந்தாது. தளங்களுக்குள் போகாகுவரத்து ஓட்டமானது குறிப்பட்ட இடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட வாகனத்தரிப்பு மூலம் விரிவாக திட்டமிடப்பட வேண்டும்.

சாலைகள்

மேம்பாட்டுத் தளங்களுக்குள், இருவழிப் போக்குவரத்திற்கான சுழற்சிச்சாலைகள் குறைந்தபட்சம் 6 மீட்டர் அகலமாகவும், முழு நடைபாதை சட்டகத்தோடும், வெளிச்சம் மற்றும் பயிரிடுதல் போன்றவற்றை கவனத்திற் கொள்வதோடு, முக்கியமாக விருந்தினரின் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக வடிவமைக்கப்பட வேண்டும். இருபக்கமும் மரம் நட்டப்பட்ட இடங்களும் நடைபாதையும் குறைந்தது 1.2 மீட்டர் அகலமாக இருத்தல் வேண்டும். மேம்பாட்டுத் தளங்களுக்கான முதன்மை நுழைவாயில்களில் குறிப்பிட்ட கவனம் பார்வைக்கோடுகள் மற்றும் பொதுப்போக்குவரத்து ஓட்டத்திற்குள் எந்த பகுதிப் போக்குவரத்து இலகுவாக உள்ளே நுழையும் வெளியேறும் என்பன குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும். திரும்பும் வட்டங்களானது குறைந்தது 6 மீட்டர் ஆரம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் கூடிய ஆரமானது இலகுவான போக்குவரத்திற்கு விரும்பத்தக்கதாகும்.