சுற்றுலாத்துறையானது இலங்கையின் பழமைவாய்ந்த ஒரு தொழில்துறையாகும். பல நூற்றாண்டுகளாக பட்டுப்பாதை வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் கிழக்காசியாவிற்கும் ஜரோப்பாவிற்கும் இடையில் பயணிக்கும் மாலுமிகள் போன்றோர் தமது பயணத்தில் இடைநிலை மாற்றத்திற்கு ஏற்ற ஒரு இடமாக கருதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கு ஒப்பீட்டளவில் ஒரு சிறிய தீவாக இருந்தாலும் அதன் பன்முகத்தன்மையானது அதன் பன்முகப்பட்ட அனுபவங்களை இலகுவாக அணுகக்கூடிய வகையில் காணப்படுகிறது.
கிழக்கு மற்றும் மேற்கு கடல் வழித்தளங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வகையில் அமைந்துள்ள இலங்கையானது, தெற்காசியாவுக்குள் நுழைவதற்கான ஒரு இலகுவானதொரு நுழைவாயிலாக செயல்படுகிறது. அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டு வரவுகள் என்பன வர்த்தகம், முதலீடு, தொடர்பாடல் மற்றும் நிதிச்சேவைகளுக்கான ஒரு தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு உலகளாவிய தளவாட மையமாக இலங்கையை நிலைநிறுத்தியுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறையானது மிகவேகமாக வளர்ந்து வருகிறது. இது பாதுகாப்பான மற்றும் பரந்த சர்வதேச நாட்டமுடைய ஒரு நாடாக இருப்பதன் மூலம் பயனடைந்து வருகிறது. இது மேலும் தனியார் துறையின் நேரடி முதலீடுகளாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களாலும், அண்மைக் காலங்களில் ஏனைய பங்குதாரர்களால் எடுக்கப்பட்ட நேர்மறையான நடவடிக்கைகளாலும் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பயணம் மற்றும் சுற்றுலா என்பன உலகின் மிகப்பெரிய சேவைத் தொழில்துறைகளாகும். இது கிட்டத்தட்ட 8.2 ட்ரில்லியன் (2017) அமெரிக்க டாலர்களை கொண்டுள்ளதுடன் அது உலகளாவிய ரீதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 10% ஐயும், உலக ஏற்றுமதிகளில் 7% இனையும், மறைமுகமாக பங்களிப்புச்செய்யும் துறையான மொத்த வேலைவாய்ப்பில் கிட்டத்தட்ட 10% இனையும் உள்ளடக்கியுள்ளது. இது பன்முகப்பட்ட மற்றும் அதிநவீனமான ஒரு துறையாக வளர்ந்துள்ளதோடு, தற்போது உலகில் பொருளாதார ரீதியாக ஒரு முன்னணி துறையாக அங்கீரிக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்புத்தன்மை வாயந்த சந்தைப் பிரிவுகளானது உல்லாச மற்றும் வணிகப் பயணங்களுக்காக மேம்படுத்தப்பட்டுள்ளது
சுற்றுலாத்துறையானது உலகளாவிய, பிராந்திய ரீதியிலும் மற்றும் உள்ளூர் வர்த்தகம், முதலீடு, உட்கட்டமைப்பு, வருவாய் மற்றும் சுற்றுச்சூழலில் (காலநிலை மாற்றம் உட்பட) மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துகிறது. சுற்றுலாத்துறையானது தனது வளங்கள் மூலம் அதிகமான வளர்ந்துவரும் நாடுகளை உடைய தனது புரவரிய நாடுகளிடையே கணிசமான அளவில் வறுமையைக் குறைப்பதற்கும் பகிர்ந்துகொள்ளக்கூடிய செழிப்பை அதிகரிப்பதற்கும் பங்களித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் வளர்ந்துவரும் நாடுகளில் சுற்றுலாப் பயணிகள் அண்ணளவாக 413 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளனர். இது அண்ணளவாக அபிவிருத்து உதவிகளின் மூன்று மடங்கு ஆகும். பல வளர்ந்துவரும் நாடுகளில் சுற்றுலாத்துறையானது அந்நாட்டின் சேவை ஏற்றுமதிகளில் 40% ஐ (உலகளாவிய சராசரி 30%) பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது ஏனைய தொழில்துறைகளை விட அதிகமான வேலைவாய்ப்புக்களை பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வழங்குகிறது. இது ஒருங்கிணைந்த, பல் பங்குதாரர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தழுவல் முயற்சிகளை ஊக்குவிப்பதோடு உலகின் ஒவ்வொரு மூலைகளையும் உள்ளடக்கிய ஒரு நீண்ட சங்கிலியினூடாக சமூக நலன்களை அதிகரிக்கவும் முடியும்.