...

வரித்திட்டங்கள்

வரிவிதிப்பு

வரிச்சலுகைகள் கிடைக்கும் பல பகுதிகள் காணப்படுகின்றன. மேலே குறிப்பிட்ட உட்பிரிவு 3.3, சில பிரதேசங்களில் வெளிநாட்டு முதலீட்டுகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்கின்றது. பொதுவாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதிகள், சுற்றுலாத்துறை, விவசாயம், உட்கட்டமைப்பு மேம்பாடு, கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் என்ற பகுதிகளையே இது உள்ளடக்குகிறது.

 

பொதுக்கட்டமைப்பு


மறைமுக வரிகள்

  • பெறுமதி சேர் வரி (VAT)

  • வருவாய் வரி

நேரடி வரி

  • வருமான வரி (தனிப்பட்ட மற்றும் பெருநிறுவன)

  • பொருளாதார சேவைக் கட்டணம் (ESC)

  • சுங்க வரிகள்

  • பணம் செலுத்தும் வரி

  • ஏனைய சமூகப்பொறுப்பு வரி.

மறைமுக வரிகள்


VAT

2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஒரு பெறுமதி சேர் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. பெறுமதி சேர் வரியானது, அமைவிடத்தின் கொள்கைகளின் படி வசூலிக்கப்படுவதோடு, இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்திற்குப் பொறுப்பாக இருக்கிறது. இது ஒரு நுகர்வு வரியாகையால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களும் இலங்கையில் பிராந்திய எல்லைக்குள் விநியோகிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளும் இந்த வரிக்குள் உட்படுகின்றன. இதனை தெளிபடுத்துவதற்காக, கீழே உள்ள அட்டவணையானது பொருந்தும் விகிதங்களை சுட்டிக்காட்டுகிறது.

வகை விகிதம் உள்ளீடு கடன்

  • அத்தியாவசியப் பொருட்களுக்கு 5% இடம்பெறாது (போக்குவரத்து மற்றும் உற்பத்தி செயன்முறைக்கான மோட்டார் வாகனங்கள் தவிர)

  • தரநிரலான விகிதம் 15% 15%

  • ஆடம்பர விகிதம் 18% 15% ஐ விடக்குறையாது

  • வெளியில் நுகரப்படும் ஏற்றுமதி மற்றுற் சேவைகளின் விநியோகத்திற்கு பூச்சிய விகிதம் செல்லுபடியாகும்.

  • இலங்கை (ஒரு ஆடைவாங்கும் அலுவலகம் வழங்கும் சேவைகளை உள்ளடக்கியது).

  • பொருட்கள் மற்றும் சேவைகளில் விலக்கு அளிக்கப்பட்டவற்றின் பட்டியலுக்கு வட் வசூலிக்கப்பட மாட்டாது மற்றும் உள்ளீட்டுக் கடனும் கிடைக்கப்பெற மாட்டாது.

  • BOI/ சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு BOI உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளருக்கு இலங்கை உள்நாட்டுச் சந்தைக்குள் விநியோகிக்கப்படும் ஒரு ஆடைக்கு சிறப்பு விகிதமாக ரூபா. 25/- வசூலிக்கப்படும்.

வருவாய் வரி

1981 ஆம் ஆண்டு, வருவாய் வரியை அறிமுகப்படுத்திய 1963 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க நிதிச்சட்டமானது, 1981 ஆம் ஆண்டு 69 ஆம் இலக்க வருவாய் வரிச்சட்டத்தினால் மாற்றீடு செய்யப்பட்டதோடு இது 1981 நவம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது. 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (தற்போது பெறுமதி சேர் வரி) உள்நாட்டு நுகர்வுப் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் வீழ்ச்சியை தணிக்க அறிமுகப்படுத்தப்பட்டது. வருவாய் வரியானது மொத்த மற்றும் சில்லறை விற்பனையிலிருந்து மட்டுமே வசூலிக்கப்படுவதோடு இது மாகாண சபைகளிலேயே செலுத்தப்படல் வேண்டும். வருவாய் வரியானது ஒவ்வொரு மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்பவர்களிடமிருந்தும் காலாண்டுக்கு ஒரு முறை வசூலிக்கப்படுகிறது. இந்த வரி, கலாண்டுக்கான வருவாய் ரூபா. 25,000 ஐ விடக்குறையாது எனில் எந்தவொரு வணிகத்திற்கும் காலாண்டுக்கு ஒரு முறை இந்த வரி செலுத்தப்பட வேண்டும்..

 

நேரடி வரிகள்


வருமான வரி

வருமான வரியின் முதன்மை நோக்கமும் முக்கிய செயன்முறையுமானது, அரசாங்கத்தின் செலவினங்களுக்கான வருவாயை உயரத்துவதாகும். ஏனைய செயன்முறைகளாக பின்வருவன போன்ற சமூக மற்றும் பொருளாதார நோக்கங்கள் உள்ளடங்கும்,

  • மிகவும் சமத்துவமான வருமான மீள்-விநியோகம்

  • அதிகரிக்கும் சேமிப்பு மற்றும் மூலதன உருவாக்கம்

  • வளங்களை ஒதுக்கிடுவதன் மூலம் விரும்பிய திசைகளில் முதலீட்டை தேடுதல்

  • தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள வருமான வரியானது 2000 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் சட்டத்தின் அடிப்படையில் காணப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை பல திருத்தங்களோடு நடைமுறையில் இருந்தது 1979 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் சட்டத்தின் அடிப்படையில் ஆகும்.

வரிவிதிப்பின் கொள்கைகள் மற்றும் அதன் முக்கிய கொள்கைகள் பின்வருமாறு

  • ஒரு நபர் இலங்கையிலிருந்து அல்லது இலங்கையில் பெறும் எந்தவொரு வருமானத்திற்கும் வருமான வரி விதிக்கப்படுகிறது. ஒரு குடியிருப்பாளர் மீது உலக வருமானத்திற்கு வரி விதிக்கப்படலாம் ஆனால் ஏறு எந்த ஒரு நபருக்கும் அவர் இலங்கயிலிருந்து அல்லது இலங்கையில் பெற்றுக்கொண்ட வருமானத்திற்கு மட்டுமே வரி விதிக்கப்படுவார்.

  • இந்த வரியானது உலளாவிய முறையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

  • அதாவது வட்டி மற்றும் ஈவுத்தொகை தவிர்ந்த அனைத்து மூலங்களிலிருந்தும் திரட்டப்படும் வருமானங்களுக்கும், 2002/2003 இன் திட்டமிடப்பட்ட முறையொன்றின் படி, வருமான வரியானது வசூலிக்கப்படும்.

  • வருமான வரியானது சுயமதிப்பீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டது. அங்கு ஒவ்வொரு நபரும் தனது வருமானத்தை கணக்கிட்டு, தான் செலுத்த வேண்டிய வரித்தொகைளை கண்டறிந்து முந்தைய வருட வரி மதிப்பீட்டின் படி வரிகளை காலாண்டு அடிப்படையில் செலுத்த வேண்டும்.

  • வருமான வரியை தாக்கல் செய்வதற்கான சட்டபூர்வமான திகதி, மதிப்பீட்டு ஆண்டிற்கு பிறகு உடனடியாக வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதியாகும்.

  • பல வரி விடுமுறைகள், முதலீட்டு ஊக்கத்தொகைகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட ஊதியங்கள் மற்றும் வருமானங்களுக்கான விலக்குகள் மற்றும் நிவாரணங்கள் காணப்படுகின்றன.

  • தொண்டு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், நிர்வாகிகள், நிறைவேற்றாளர்கள் மற்றும் சங்கங்களுக்கு சலுகையுடன் கூடிய வரிவிகிதகள் அமுல்படுத்தப்படும்.

  • மூலத்திலிருந்து வரி விதிக்கப்படும் இடங்களில் நிறுத்தி வைக்கும் வரி முறையும் பயன்பாட்டில் உள்ளது.

 

பெரு நிறுவன வரி


வரி விகிதங்கள்

  • நிறுவனத்தின் வரிக்குரிய லாபம் ரூபா. 500,000 இற்கு மேல் எனில் அதற்கான வரி பின்வருமாறு
    பொதுவான மேற்கோளில் @ 30%
    மற்றவை @ 32.50%

  • நிறுவனத்தின் வரிக்குரிய லாபம் ரூபா. 500,000 இற்கு கீழ் எனில் அதற்கான வரி 20% ஆகும்
    பொதுவாக வரிச்சலுகைகள், ஏற்றுமதி, கட்டுமானம், சுற்றுலாத்துறை என்பவற்றிற்கு 15% வரி விதிக்கப்படும்.

  • 2005/2006 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  • ஈவுத்தொகை வரி
    செலுத்தப்படும் அனைத்து ஈவுக்கும் 10% வரி விதிக்கப்படும்.
    வட்டி மற்றும் ஈவுத்தொகை வருமானம்
    பெறப்பட்ட ஈவுத்தொகையானது மதிப்பிடக்கூடிய வருமானத்தின் ஒரு பகுதியாகக் காணப்படாது.

  • மொத்த வட்டியானது வருமான வரிக்கு உட்படுவதோடு 10% நிறுத்திவைக்கும் வரியானது அதிலிருந்து கழிக்கப்படலாம்.

  • இரண்டாம் நிலை சந்தைப் பரிவர்த்தனைகளுக்கான வட்டி வருமானமானது திரட்டப்பட்டு வரிவிதிக்கப்படுவதோடு நிறுத்திவைத்தல் வரி கழிக்கப்படலாம்.

பொருளாதார சேவைக் கட்டணம் (ESC))

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி, பொருளாதார சேவைக்கட்டணம் எனப்படும் புதிய வரியொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது அதே ஆண்டுக்குரிய வருமான வரிக்கு எதிராகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்படாத நிலுவைத்தொகையை முன்னெடுத்துச் செல்லவும் கூடியது.

மூன்று வருடங்கள் அல்லது அதற்கு மேலாக செயற்பட்டு வரும் வர்த்தகம் தவிர்ந்த எல்லா வணிக, தொழில்சார் அல்லது உத்தியோகத்தி் ஈடுபடும் ஒவ்வொரு நபருரினதோ அல்லது கூட்டினதோ மொத்த வருவாய் (மூலதன சொத்துக்கள் விற்பனை செயன்முறை மற்றும் வட் தவிர்த்து) தொடர்புடைய ஆண்டில் 50 மில்லியன் ரூபா எனில் பொருளாதார சேவைக் கட்டணத்திற்கு உட்படுவதோடு பொருளாதார சேவைக்கட்டணமானது குறித்த வருடத்திற்கு 50 மில்லியன் ரூபாய்க்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ஆண்டு என்பது முந்தய ஆண்டின் வருவாயைக் குறிக்கிறது. இதன்போது மூன்று வருட விதிக்குள் இருந்தாலும் வர்த்தகத்திற்கும் விதிக்கப்படும்.

பணப்பறிமாற்ற வரி

உள்நாட்டு வருவாய் சட்டத்தின் பிரிவு 57(1) இன்படி, ஒரு குடியிருப்பிலில்லாத ஒரு நிறுவனமானது 2003/2004 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து அந்த ஆண்டுக்கான மொத்தப் பணப்பரிமாற்றத்தில் 10% ஆனது வரியாக விதிக்கப்படும்..

 

ஏனையவை


சமூகப்பொறுப்பு வரி

2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கான தேசிய செயல் திட்டத்திற்காக ஒரு நிதியம் உருவாக்கப்பட்டது. இந்த நோக்கத்கிற்காக ஜீ.எஸ்.டீ, வட் மற்றும் பொருளாதார சேவைக் கட்டணம் தவிர்த்து, வரி விதிக்கப்படக்கூடிய அனைத்திலும் சமூகப்பொறுப்பு வரியாக .25% வரியானது 2005/2006 முதல் விதிக்கப்படுகிறது.

மூலதன ஆதாய வரி

ஒரு பரிவர்த்தனையின் மூலம் வரும் மூலதன ஆதாயமானது 2002 மார்ச் 31 வரை வித்தியாசமானதொரு வருமான ஆதாரமாக இலங்கையில் பார்க்கப்பட்டது. பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

குடிமகன்கள் அல்லாத ஊழியர்கள்

குடிமகன்கள் அல்லாத ஊழியர்கள் இலங்கையில் வேலைவாய்ப்புகள் தொடங்கியதிலிருந்து 3 வருட காலத்திற்கு குடியுமை அல்லாதவர்களாக கருதப்படிகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அவர்கள் சலுகை விகிதத்தில் 15% வருமான வரிக்கு உட்படுவர். மேலும் இரண்டு வருடகாலத்திற்கு அவர்கள் தொடர்ந்து பணியாற்றினால் 15% வரி தொடரும். இலங்கையில் வேறு எந்த வருமானத்திற்கும் சாதாரண விதிகதத்தில் வரி விதிக்கப்படும்.

நிறுத்திவைத்தல் வரி

மூலதனத்திற்கு வரி விதிக்கப்படும் இடத்தில் நிறுத்திவைத்தல் வரி எனும் முறை காணப்படுகிறது.

தற்போதைக்கு பொருந்தும் சில நிறுத்திவைத்தல் வரி விகிதங்கள் பின்வருமாறு:
அனைத்து ஈவுத்தொகைகளுக்கும் 10%
அதிஷ்டப் பரிசுகளுக்கு > ரூ. 500,000 10%
வட்டி 10%
கருவூல விலைப்பட்டிலுக்கு 10%
குடியிருப்பு அல்லாத வாடகை வருமானம் > மாதமொன்றிற்கு ரூபா. 50,000 10%
குறிப்பிட்ட நபர்கள் செலுத்தும் குறிப்பிட்ட பணத்திற்கு 5%

சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள்

இலங்கையின் வரி ஒப்பந்தங்களானது பொதுவாக நிவாரணம் வழங்க பின்வரும் இரண்டு அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றுன்றன:
(அ) வெளிநாட்டு வரிக் கடன் கொள்கை (ஆ) விலக்குக் கொள்கை

வெளிநாட்டு வரிக்கடன் கொள்கையின் கீழ் வசிக்கும் வெளிநாட்டு வருமானம் உட்பட மொத்த வருமானத்திற்கும் அவர் வசிக்கும் நாடே வரி விதிக்கிறது. ஆனால் குடியிருப்பாளர் தனது வெளிநாட்டு வருமானத்தால் செலுத்தும் வெளிநாட்டு வரிக்கு கடன் அல்லது தள்ளுபடியை வழங்குகிறது. உள்நாட்டு வரியை விட வெளிநாட்டு வரி குறைவாக உள்ள பட்சத்தில் அத்தகைய வரியின் வித்தியாசத்தையே வசிக்கும் நாட்டிற்கு செலுத்த வேண்டும். உள்நாட்டு வரியை விட வெளிநாட்டு வரி அதிகமாக உள்ள பட்சத்தில் வசிக்கும் நாட்டிற்கு எந்த வரியும் செலுத்தத் தேவையில்லை.

விலக்கு முறையின் கீழ், வரி செலுத்துவோரின் ஏனைய வருமானங்களின் மீது வரி நிர்ணயத்தின் போது விலக்கு அளிக்கப்பட்ட வருமானங்கள் கருத்திற் கொள்ளப்பட மாட்டாது.

வளரும் நாடுகளில் வரி விடுமுறைகள் மற்றும் வரிச் சலுகைகளின் வடிவில், வரி செலுத்துவோருக்கு இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தங்கள் மூலம் விதிக்கப்படும் இரட்டை வரிவிதிப்பால் ஏற்படும் கடன் இழப்பைத் தடுக்க வரிச்சேமிப்பு நிவாரணமும் வழங்கப்படுகிறது. இவ்வாறான கடன்கள் பொதுவாக ஈவுத்தொகை, வட்டி அல்லது உரிமைப்பங்கு அல்லது வரி விடுமுறையின் கீழ் வரிப்பரவல் அல்லது ஈவுத்தொகை செலுத்தப்பட்ட துணை நிறுவனங்களின் இலாபங்களுக்காக வழங்கப்படும்.