இலங்கை சுற்றுலாத்துறையின் நோக்கமானது, இலங்கையை, அதன் அழகிய கடற்கரைகள், நட்புறவான மக்கள், மேலான இயற்கை, கலாச்சாரம் மற்றும் சாகச வாய்ப்புக்கள் என்பவற்றின் மூலம் ஆசியாவின் மிகவும் பெறுமதியான மற்றும் பசுமையான தீவாகவும் ஆசியாவின் ஒரு சுற்றுலா விம்பமாகவும் மற்றும் சுற்றுலாவின் பங்குதாரர்களுக்கும் இலங்கை மக்களுக்கும் பயனளிக்கும் மிகப்பெரிய அந்நிய செலாவணியைச் சம்பாதிக்கும் நாடாகவும் இலங்கயை நிலைநிறுத்துவதே ஆகும்.
இந்த நோக்கத்தை அடைய இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்கி மகிழ்விப்பதற்கும், எமது பங்குதாரர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் முக்கிய உந்துசக்தியாக இலங்கை சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும், கட்டியெழுப்பவும் வழங்கவும் முயற்சிக்கிறது:
மிகவும் தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்த, விரிவாக்க மற்றும் பராமரிக்க ஒரு ஊக்கியாக செயற்பட
தங்கள் பாதுகாப்பை பற்றி அக்கறைப்படும் சுற்றுலாப் பயணிகளை திருப்திப்படுத்தவும் மகிழ்ச்சிப்படுத்தவும் கூடிய உயர்தரத் தயாரிப்பு மற்றும் சேவையை நிறுவ மற்றும் விரிவாக்க
சுற்றுலாத்துறையின் முதலீடுகளை தக்கவைக்கவும் அதிகரிக்கவும் தேவையான வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் அளவையும் வருவாயையும் உறுதிசெய்ய.
இலங்கையை ஒரு பெறமதிமிக்க தீவாகவும், காபன் குறைக்கப்பட்ட சுற்றாலா உலகின் கேந்திர நிலையமாகவும் இலங்கையை சாத்தியமான வாடிக்கையாளர்களிடையே முன்னணியில் நிலைநிறுத்த
தொழில்துறை வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகள் மூலம் தொழிற்துறைக்கு தேவையான மனிதவளத்தேவைகளை பெற்றுக்கொள்ள
இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் தொழிற்துறைக்கு உள்ளேயும் வெளியேயும், மத்தியிலும் பிராந்தியத்திலும் உள்ள முறையான மற்றும் முறைசாரா அனைத்துப் பங்குதாரர்களையும் ஈடுபடுத்த
இலங்கையர்களின் பயணத்தேவைகளைஅ பூர்த்தி செய்யவும் சர்வதேச சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் உதவுவதற்காக உள்நாட்டுச் சுற்றுலாத்தளத்தை விரிவுபடுத்த
இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையானது
இலங்கையை இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான பயண மற்றும் சுற்றுலா நிலையமாகவும்,
இத்துறை தொடர்பாக கபினட் அமைச்சரவையால் வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளின்படி பயணம் மற்றும் சுற்றுலா சார்பான விடயங்களில் சுற்றுலாத்துறைக்குப் பொறுப்பான அமைச்சருக்கு ஆலோசனை வழங்குதலும்
இலங்கையை பயணம் மற்றும் சுற்றுலாக்கு பொருத்தமான இடமாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மேம்படுத்த, ஊக்குவிக்க மற்றும் சந்தைப்படுத்த இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டுப் பணியகத்திற்கு வழிகாட்டல்களை வழங்குதல்
மனிதவளப் பயிற்சி வழங்கல் மற்றும் மேம்படுத்தல் செயற்பாடுகளை நடாத்திச்செல்ல இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவக் கல்லூரிக்கு வழிகாட்டல்களை வழங்கல்
இலங்கையின் பொருளாதாரத்தை விரிவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு பங்களிப்பை செலுத்தக்கூடிய வகையில் சுற்றுலாத்துறையையும் சுற்றுலா அலகுகளையும் விரிவாக்கல்
உபசரனை மேம்பாட்டுடன் கூடிய தேவையான, கவர்ச்சியான மற்றும் திறமையான சுற்றுலாச் சேவைகளை நிலையான முறையில் மேம்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல், சுற்றுலாத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய துறைகளினது உள்நாட்டில் மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிரல்களை மேம்படுத்த
அமுல்படுத்த மற்றும் பராமரிக்கும் நோக்கில் சுற்றுலா நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கள் மற்றும் அங்கீகாரம் வழங்குதல்
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க மற்றும் சுற்றுலாத்துறையோடு சம்பந்தப்பட்ட ஏனைய துறைகளை ஊக்குவிக்க மற்றும் பயிற்சி வழங்க தனியார் துறையைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நபர்களைக்கொண்ட அமைப்புகளை ஊக்குவித்தல்
மேற்குறிப்பிட்ட அடைவுகளை உடையும் நோக்கில் தேவையான அல்லது உகந்த பிற செயற்பாடுகளைச் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளது.
மேற்கூறியவற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையானது, சுற்றுலாத்தறையை வளரச்செய்வதற்காக, முதலீடுகளை பெற்றுக்கொள்ளவும் புதிய மற்றும் இருப்பில் உள்ள தயாரிப்புக்களை மேம்படுத்தவும், அரசாங்கம், தனியார மற்றும் வெளிநாட்டுத்துறைகளுடன் கைகோர்த்துள்ளது.