...

எமது சேவைகள்

சுற்றுலாச் சேவைகள்

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையானது (SLTDA) இலங்கையின் சுற்றுலா சேவைகளை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது. அவ்வப்போது மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சாத்தியமான மேம்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.


SLTDA ஆனது அவ்வப்போது


  • அதன் தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை அடையாளம் கண்டு மேம்படுத்துகிறது

  • பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு வழிகாட்டல்களை உருவாக்கி அமுல்படுத்துகிறது

  • புதிய நிறுவனங்களுக்கான தொடர்புடைய சட்ட மற்றும் நிர்வாக செயன்முறைகளை எளிதாக்குகிறது மற்றும் அமுல்படுத்துகிறது.


தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் மேம்பாடு

SLTDA ஆனது


  • பிராந்தி சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களை தயாரிக்க மற்றும் வசதி செய்து கொடுக்க

  • மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை தயாரித்தல் /வசதி செய்தைகொடுத்தல் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்தை அளவிடுதல் என்பவற்றில் உதவுகிறது.


மதிப்பீடு

The SLTDA


  • பிராந்திய சுற்றுலா அலுவலகங்களை நிறுவுதல், பராமரித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்

  • சாத்தியமான மேம்பாட்டுப் பகுதிகளின் பட்டியலை அடையாளம் கண்டு பராமரித்தல்

  • SLTPB, அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட தொடர்புடைய பகுதிகளோடு ஒத்துழைக்கிறது.


அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைத்தல்

 

SLTDA ஆனது சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தயாரிப்புக்கள் மேம்பாடு மற்றும் சேவைகள் மேம்பாட்டுக்காக பல்வேறு அரசு அதிகாரிகளுடன் நல்ல உறவுகளைப் பேணுகிறது. SLTDA


  • சுற்றுலா மேம்பாட்டுப் பகுதிகளை அறிவித்தல் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளை நிர்வகித்தல்

  • சுற்றுலா மேம்பாட்டிற்கான நிலங்களை கையகப்படுத்துதல்

  • முதலீட்டிற்கான முன்மொழிவுகளை ஆய்வு செய்தல் மற்றும் சரிபார்த்தல், மற்றும் விண்ணப்பங்களை செயற்படுத்தல்


புதிய சுற்றுலாத் தயாரிப்பு மேம்பாடு

SLTDA


  • விளையாட்டு சுற்றுலா, கப்பல் பயணம் போன்ற புதிய சுற்றுலாத்திட்டங்களை உருவாக்கத் திட்டமிட உதவ உறுதிபூண்டுள்ளது.


சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சிறப்பு ஆர்வமுள்ள சுற்றுலா

SLTDA புதிய திட்டங்கள்/கூட்டு முயற்சிகளுக்கு சாத்தியமான முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்கிறது மற்றும் வெளிப்புற நிதியுதவி திட்டங்களை செயல்படுத்த உதவுகிறது. மேலும் இது தயாராப்புக்களை வசதிசெய்துகொடுப்பதற்காக, நிதி திரட்டுவதற்காக தயாரிப்புகளை உருவாக்கவும் மற்றும் பிற திட்டங்களைத் தயாரிக்கவும் உதவுகிறது.


சேவைகள் மேம்பாடு

தற்போதுள்ள சேவைகளை மேம்படுத்துவது முக்கியமானதாகும். SLTDA


  • தயாராப்புக்கள் மற்றும் சேவைகளின் தகவல்கள் மற்றும் தரவுகளை இலகுவாக பெற்றுக்கொள்ள

  • புதிய தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள

  • தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளில் புதிய போக்குகளை கண்காணிக்க உதவுகிறது