...

முதலீட்டு உதவிகள்

நேரடி முதலீடு

தெற்காசி பிராந்தியத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்த முதல் நாடு இலங்கையாகும். இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் வெளிநாட்டு முதலீடுகளின் பங்களிப்பு முக்கியமானதாகையால் அது முக்கியமாக ஊக்குவிக்கப்படுகிறது. இலங்கையில் ஒரு வெளிநாட்டு வர்த்தகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதலீட்டு வாரியத்தின் (BOI) ஒப்புதல் தேவைப்படுகின்றது. BOI ஆனது ஒரு தன்னாட்சி நிறுவனமாகவும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பொறுப்பான முதன்மை அரச நிறுவனமாகவும் காணப்படுகிறது. BOI சட்டத்தின் 17 ஆவது பிரிவின் கீழ், குறிப்பிட்ட சில தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்குகின்றது. முதலீட்டாளர்களுக்கு முன்னணி வரிவிகிதங்கள், முதலீட்டு ஒப்பந்தங்களின் மீதான அரசியலமைப்பின் உத்தரவாதங்கள், பரியாற்றக் கட்டுப்பாட்டு விலக்குகள் மற்றும் இலாபங்கள் மற்றும் மூலதனங்களை 100% மீள அனுப்புதல் ஆகியன வழங்கப்படுகின்றன. இலங்கையில் வரி விடுமுறைகள் மற்றும் வரிச் சலுகை விகிதங்கள், தீர்வை விலக்குகள் போன்ற கவர்ச்சிகரமான வரிச்சலுகைகள் அவர்களது தொழில்துறை மற்றும் மூலதன முதலீட்டைப் பொறுத்து வழங்கப்படுகின்றன.

BOI சட்டத்தின் 17 ஆவது பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டு வாரியத்துடன் ஒப்பந்தம் செய்து, பரிமாற்றக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு ஏற்றுமதி சார் நிறுவனமானது, வணிக வங்கியொன்றின் எந்தவொரு வெளிநாட்டு நாணய வங்கியியல் பிரிவிலும் (FCBU) ஒரு வெளிநாட்டு நாணயக் கணக்கை ஆரம்பித்து செயற்படலாம். வெளிநாட்டு நாணயங்களில் கடன்பெறலாம். எந்தவொரு வணிக வங்கியிலும் இலங்கை நாணயக் கணக்கை ஆரம்பித்து செயற்படுத்தலாம்.

BOI சட்டத்தின் 16 ஆவது பிரிவின் கீழ், இலங்கை அரசாங்கமானது, பொருளாதாரத்தின் பல துறைகளில் 100% வெளிநாட்டுப் பங்களிப்பு அனுமதிப்பதோடு, இந்த மாதிரியான முதலீடுகளுக்கு BOI ஆனது தன்னியக்க ஒப்புதல்களை அளிக்கிறது. சில வரையறுக்கப்பட்ட துறைகளில் முதலீடு செய்யும் போது வெளிநாட்டு முதலீடு 40% இனைத் தாண்டினால் ஒவ்வொரு விடயமும் அலசி ஆராயப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்புகொள்ள வேண்டிய ஒரே நிறுவனம் BOI ஆகும். அதன் சேவைகளாக முதலீட்டு செயன்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்குவது என்பன உள்ளடக்கப்படுகின்றன. BOI வழங்கும் சேவைகள்:

  • திட்ட விண்ணப்பச் செயன்முறைக்கான வழிகாட்டல்கள் மற்றும் தகவல்களை வழங்குதல்

  • ஏனைய நிறுவனங்களின் ஒப்புதல்களை ஒருங்கிணைத்தல்

  • பொருந்தக்கூடிய சலுகைகளை விண்ணப்பிக்கும் பொருட்டு விண்ணப்பத்தை, வழங்கப்படும் ஒப்புதல்களையும் மதிப்பீடு செய்தல் ,தொடங்கும் போதான உதவிகள், தளத்தேர்வு, தொழிற்சாலைக் கட்டடம்/ தொழில்நுட்ப விடயங்களில் ஆலோசனை வழங்கல், உதவிச்சேவைகளை ஏற்பாடு செய்தல்,நீர், மின்சாரம்,கழிவுச் சுத்தீகரிப்பு மற்றும் தொலைதொடர்பு.

  • குடியிருப்பு வீசாக்களை வழங்க குடிவரவு அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தல்

  • ஏற்றுமதி/இறக்குமதி அனுமதியை எளிதாக்கல்

  • சுற்றுச்சூழல் விதிமுறைகள்/ ஒப்புதல்களுக்கான ஆலோசனைகள்

  • தொழில்துறை உறவுகளை மேம்படுத்த மற்றும் தொழிலாளர் ஒன்றியங்களை உருவாக்க உதவுதல்


புதவோலை முதலீடு

கடந்த காலங்களில் இலங்கையின் முலதன மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் மாற்றீட்டு ஆணையமானது (SEC) இலங்கையில் பாதுகாப்பான சந்தையை ஒழுங்குபடுத்துவதோடு பங்குச் சந்தைகள், பங்குத் தரகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட துறைகளில் உள்ள இலங்கை நிறுவனங்களில் 100% வரை முதலீட்டுப் பங்குகளை சதந்திரமாக வாங்க முடியும். புதவோலை முதலீடுகளை எளிதாக்கும் பொருட்டு, முன் ஒப்புதலுக்குப் பிறகு நாட்டு நிதி மற்றும் பிராந்திய நிதிகளுக்கு இலங்கையின் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த நிதி வணிக வங்கிகளில் பராமரிக்கப்படும் பங்கு முதலீட்டு வெளி ரூபாய் கணக்குகள் (SIERA) மூலம் பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும்.

கொழும்பு பங்குச் சந்தை (CSE), பெரிய வளர்ந்து வரும் சந்தைகளின் தரங்களோடு ஒப்பிடும் போது சிறியதாக இருந்தாலும் பிராந்தியத்தில் மிகவும் தாக்கம் செலுத்தும் ஒரு சந்தையாகக் காணப்படுகிறது. 1991ஆம் ஆண்டு மத்திய வைப்பிடல் அமைப்பின் (CDS) ஆரம்பத்தின் மூலம் முற்றுமுழுதான கணினி மயப்படுத்தப்பட்ட அனுமதி முறை மற்றும் தீர்வு முறையானது அறிமுகப்படுத்தப்பட்டது. 1997 இல் CSE ஆனது நவீன கணனி அடிப்படையிலான தானியங்கி கட்டளை பொருந்தும் அமைப்பை உருவாக்கியது. CDS ஆனது தானியங்கி வரத்தக அமைப்பில் நிதழ்நேரத்தில் இணைக்கப்பட்டது. இந்த வளர்ச்சிகளானது CSE ஐ உலகில் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் முன்னேறிய பரிமாற்றங்களுக்குள் இணைத்தது. 1998 இல் இல் CSE ஆனது பங்குச் சந்தைகளின் உலகக்கூட்டமைப்பில் முதல் தெற்காசிய உறுப்பினராக இணைந்துகொண்டது. CDS ஆனது அதே வருடத்தில் ஆசிய-பசுபிக் மத்திய பத்திக் குழுவிலும் (ACG) உறுப்பினராக இணைந்துகொண்டது.

2004 மார்ச் மாதம் CSE ஆனது தனது கடன் வர்த்தக அமைப்பை (DEX) அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது. DEX ஆனது பரிமாற்றங்களினுடாக பெருநிறுவன கடன் பொறிமுறைகள் மற்றும் அரசாங்கத்தின் பிணைகளின் குறித்த நன்மைகள் மற்றும் கருவூல விலைப்பட்டியல்களை வர்த்தகம் செய்வதை செயல்படுத்துகிறது. புத்தகமூடான வர்த்தகத்தை நிகழ்நேரத்தில் வெளிப்படுத்தும் முகாமைத்துவம், பல் சுழற்சித் தீர்வுகள் மற்றும் இணையத்தள அடிப்டையிலான தொழில்நுட்பங்களுடனான இணக்கம் போன்ற பல மேம்பட்ட அம்சங்களை DEX கொண்டுள்ளது. பதினைந்து உள்நாட்டு வெளிநாட்டு கூட்டுத்தரகர்கள் CSE இல் செயல்படுகின்றனர்.


நிலம்சார் வியாபர முதலீடு

இலங்கையில் சொத்துக்களில் ஆர்வமுள்ளதுற்பட, நிலம்சார் வியாபாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளின் போது எந்த ஒப்புதலும் தேவைப்படுவதில்லை. இருப்பினும் மூன்றாம் மாடிக்கு மேலே உள்ள குடியிருப்புக்களை வாங்கல், 100 இற்கு மேற்பட்ட வீட்டலகுகளை உருவாக்கல், வைத்தியசாலைகள், உடகட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு நாணய அரசுப் பத்திரக் கணக்குகளில் 150,000 டாலர்களுக்கு மேல் வைத்திருப்பவர்கள் தவிர்ந்து, சொத்துமதிப்பின் 100% பரிமாற்ற வரி செலுத்தப்பட வேண்டும்.

இதேபோல், ஒரு நிறுவனத்தின் விடயத்தில், வழங்கப்படும் பங்கு முலதனத்தின் 25% இற்கும் மேற்பட்டதை குடிமக்கள் அல்லாதவர்கள் வைத்திருப்பின், அந்த நிறுவனமானது 100% பரிமாற்ற வரியை செலுத்த வேண்டும்.