சாத்தியமான முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய உதவுவதில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையானது உறுதி புண்டுள்ளது. இலாபகரமான ஊக்கத் திட்டங்கள் இருப்பதோடு ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவ திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு பணிப்பாளரின் உதவியை பெற்றுக்கொள்ளலாம்.
திட்ட முன்மொழிவாளர், இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் மேம்பாடு பணிப்பாளருக்கு தமது திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும். (தொலைபேசி 011 - 2437062). முன்மொழிவானது பின்வருனவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்
முதலீட்டாளரின் அறிமுகம்,
கருத்தாக்கம்,
இட அமைவு,
விளைபொருள் உருவாக்கம்,
நிதித்திட்டம்,
சந்தைப்படுத்தல் உத்தி மற்றும்
சமூக நலன்கள்.
முன்மொழிவானது மதீப்பீடு செய்யப்படுவதோடு திட்டமிடல் மற்றும் மேம்படுத்தல் பணிப்பாளர், முன்மொழிவாளரை மேம்பாட்டுக் குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பார். இந்தக் கூட்டத்தில் முன்மொழிவானது விரிவாக விவாதிக்கப்படும்.
அதேநேரம், முன்மொழியப்பட்ட திட்டத்தின் பொருத்தத்தை மதிப்பீடு செய்ய ஒரு தள ஆய்வானது நடாத்தப்படும்.
மேம்பாட்டுக்குழுக் கூட்டம் மற்றும் தள ஆய்வுக்கு பின்னர், ஒரு 'கொள்கை ஒப்பதல்' கடிதமானது வழங்கப்படும்.
திட்ட முன்மொழிவானது ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், திட்ட முன்மொழிவாளர் அனைத்து மேம்பாட்டு வழிகாட்டுதல்களும் பூர்த்திசெய்யப்படுவதை உறுதிசெய்ய ஒரு விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
திட்ட முன்மொழிவாளர் ஒருவர் ஒப்புதலைப் பெற, SLTDA இன் குறிப்பிட்ட நிபந்தனைகளப் பூர்த்திசெய்ய வேண்டும். இந்த அளவீடுகளின் விவரங்கள் பின்வரும் அறிவிப்புக்களில் கொடுக்கப்பட்டுள்ளன. 11 மார்ச் 1999 திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு எண் 1070/10 இல் ஹோட்டல் திட்டங்களுக்கு தேவையான நிபந்தனைகளை விவரிக்கிறது. 6 செப்டம்பர் 1999 திகதியிடப்பட்ட 1096/6 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில், விருந்தினர் மாளிகைகள் திட்ட அளவீடுகளை விவரிக்கிறது.
முழுமையாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவமானது SLTDA இன் திட்டமிடல் மற்றும் மேம்படுத்தல் பிரிவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பம் அனுமதிகளுக்காக சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை போன்ற தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புக்கள்
பணிப்பாளர் (NRM மற்றும் M) "பரிசர பியச", 104, டென்சில் கொப்பேகடுவ வீதி, பத்தரமுல்லை. தொலைபேசி. 011 2872419
பணிப்பாளர்/ அமுலாக்கம், 6ஆவது 7 ஆவது தளங்கள், செத்சிரிபாய, பத்தரமுல்லை. தொலைபேசி. 011 - 2872616
பணிப்பாளர் நாயகம், இலக்கம் 18, கிரகரி வீதி, கொழும்பு 07. தொலைபேசி. 011 - 2694241
வனப்பாதுகாவலர் நாயகம், வனத்துறை, ரஜமல்வத்தை வீதி, பத்தரமுல்லை. தொலைபேசி. 2866616, 2866128
முகாமையாளர், தபால் பெட்டி இல. 556, புதிய செயலகம், மாளிகாவத்தை, கொழும்பு 10. தொலைபேசி. 011 - 2449755
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் பிரதிப் பணிப்பாளர், 238, பௌதாலோக்க வீதி, கொழும்பு 07. தொலைபேசி. 011 - 2555647
மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை:
நகர அபிவிருத்தி அதிகார சபை:
வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம்
வனத்துறை:
கடலோர பாதுகாப்புத் திணைக்களம்:
நீர்ப்பாசனத்துறை
திட்ட முன்மொழிவாளர் விரிவான ஒரு கட்டடக்கலை வரைபடத்தை SLTDA இன் மேம்பாடு மற்றும் விடுதி முகாமைத்துவப் பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். SLTDA இன் சுற்றுலாத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுப் பிரிவினால் வழங்கப்பட்ட வினாநிரலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
SLTDA மற்றும் அனைத்துத் தொடர்புடைய அரச நிறுவனங்களின் விதிகள் மற்றும் விதிமுறைகளுடன் குறித்த திட்டமானது இணங்குகிறது என்பதை SLTDA உறுதி செய்தவுடன் பணியினை துவங்குவதற்கான இறுதி ஒப்புதல் மற்றும் அனுமதி வழங்கப்படும்..
குறிப்பு :-
1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் (1988 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க திருத்தச்சட்டம் உள்ளடங்களாக) படி, குறிப்பிட்ட திட்ட வகைப்படுத்தலின் கீழ் வந்தால், சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற EIA/IEE செயன்முறைகளை பின்பற்ற வேண்டும்..
SLTDA இறுதி ஒப்புதல் வழங்கிய நாளிலிருந்து ஆறுமாத காலத்திற்குள் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படலாம்.
கட்டுமானப்பணிகள் SLTDA இனால் கண்காணிக்கப் படுவதோடு, காலாண்டுத் திட்ட முன்னேற்ற விளைவுகள் SLTDA இற்கு அனுப்பப்படல் வேண்டும்.
கட்டுமானப்பணிகள் முடிந்தவுடன், திட்ட மேம்பாட்டாளர், உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட இணக்கச் சான்றிதலின் நகலை SLTDA இற்கு சமர்ப்பித்து செயல்பாடுகளை தொடங்க ஒப்புதல் கோர வேண்டும்.
SLTDA இன் வர்த்தக தரநிலைப் பிரிவானது, சுற்றுலா நிறுவனமானது முழுமயடைந்த பின்னர் தர நிலை மதிப்பீடொன்றை மேற்கொள்ளும்.
சுற்றுலா நிறுவனமானது பின்னர் SLTDA இன் வர்த்தக தரநிலைப்பிரிவில் தம்மைப் பதிவுசெய்துகொள்ள முடியும்.
நிர்வாகிகளின் சுயவிவரங்கள்.
ஊழியர்களின் மருத்துவச் சான்றிதழ்கள், குறிப்பாக சமையல்த்துறையைச் சார்ந்த ஊழியர்களின்..
நீரின் நுண்ணுயிரியல் பரிசோதனை (நீர் மாதிரி அறிக்கை)
பொதுப்பொறுப்பை உள்ளடக்கிய விரிவான/ஒருங்கிணைந்த காப்பீட்டுக் கொள்கை.
போதுமான தீயணைப்புக் கருவிகள் மற்றும் பயிற்சிச் சான்றிதழ்.
உள்ளூர் அதிகாரங்களால் வழங்கப்பட்ட வர்த்தக அனுமதிப் பத்திரம்.
மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை அல்லது உள்ளூர் அதிகார சபைகளினால் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் (EPL)..